சொல் பொருள்
எடைபோடுதல் – மதிப்பிடுதல்
சொல் பொருள் விளக்கம்
எடுத்தல் என்பது நிறுத்தல், எடுத்தலளவை, அறிக. நிறுக்க வேண்டுமானால் தூக்குதல் வேண்டும். ஆதலால் தூக்குதலும் ஆராய்தல் பொருள் தருவதாயிற்று. எடை போடுதலில் ‘இவ்வளவு’ எனச் சரியான மதிப்பீடே முடிவு. அவ்வழக்கில் இருந்து, “கொஞ்சம் பேசினால் போதுமே! அவனை எடைபோட்டு விடலாம்” என வழக்கு மொழி தோன்றியது. ‘எடைபோடுதலில் மிகுந்த தேர்ச்சியாளன்’ எனச் சிலர்க்குத் ‘தனிப்பேர் உண்டு.’
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்