சொல் பொருள்
என்னங்க – கணவர்
சொல் பொருள் விளக்கம்
“என்ன அவர்களே” என்பது முடிந்த அளவும் தேய்ந்து ‘என்னங்க’ என வழங்குகின்றது. “அவர்கள்- அவன்கள்- அவங்க” எனமாறும். என்னங்க என்பது, பெரியவர்களை மதித்து வினவும் வினாப் பொதுமையுடையது எனினும் அப்பொதுமை நீங்கி, மனைவி ஒருத்தி தன் கணவனைக் கூப்பிடும் கூப்பீடாக அமைகின்றது. ‘என்னங்க உங்களைத்தானே’ ‘என்னங்க, போகலாமா?’ என்பவற்றை அறிக. ‘அவங்க என்ன சொல்லுவாங்களோ’ என்பதில் ‘அவங்க’ என்பதும் கணவனைக் குறிப்பதே. ‘அவர்’ காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்