எருக்கம் என்பது ஒரு வகைச் செடி
1. சொல் பொருள்
(பெ) எருக்கு, ஒரு வகைச் செடி
2. சொல் பொருள் விளக்கம்
இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு. ஆதி மனிதன் எருக்கம் நாரைக் கயிறாகப் பயன்படுத்தியுள்ளான். சித்த மருத்துவத்தில் சுவாச குடோரி மாத்திரை என்பது எருக்கம் பூவின் மூலம் தயாரிக்கப்பட்டு சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் பூக்கள் கொத்தாகவும் மிருதுவாகவும், வெள்ளை அல்லது மென் நீல நிறமுடையதாகக் காணப்படும். ஒவ்வொரு பூவும் ஐந்து முனை இதழ்களையும், நடுவிலிருந்து உயர்ந்த சிறிய அழகிய “கிரீடத்தை”யும் கொண்டு மகரந்தக் கேசரத்துடன் காணப்படும். இதன் இலைகள் முட்டை வடிவிலும் இளம் பச்சை நிறத்தில், தண்டில் பால் கொண்டும் காணப்படும்.
எருக்கில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Calotropis gigantea, Crown flower, Madar, Calotropis procera. procera என்றால் உயரமான, gigantea என்றால் மிகப் பெரிதான என்று பொருள், Milky Shrub Plant, Gigantic Swallow wort, Giant Milkweed
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
“குறுமுகழ் எருக்காவ் கண்ணி” என நற்றிணையிலும், “குவியினார் எருக்கு” என கபிலரும், “புல்லெருக்கங்கண்ணி நறிது” என தொல்காப்பியமும் குறிப்பிடுகிறது
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப – குறு 17/2
குவிந்த அரும்பினையுடைய எருக்கம்பூ மாலையையும் தலையில் சூடிக்கொள்வர்;
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி - நற் 220/2 குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப - குறு 17/2 புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை - புறம் 106/2
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி - தேவா-சம்:4092/3
எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர் - தேவா-அப்:2009/1
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் - தேவா-சுந்:368/2
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா - திருப்:594/5
வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி மேலும் கீழும் - யுத்4:38 23/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்