எருவை என்பது ஒரு வகை நாணற்புல்
1. சொல் பொருள்
(பெ) 1. பஞ்சாய்க்கோரை, 2. கொறுக்கச்சி, 3. தலைவெளுத்து உடல்சிவந்திருக்கும் பருந்து,கழுகு
2. சொல் பொருள் விளக்கம்
தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து, கழுகு எனினும் அமையும். (புறம் 64. ப. உ)
ஒரு வகை பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகின்றனர்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Arundo donax
Species of Cyperus.
European bamboo reed
a kite whose head is white and whose body is brown;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எருவை செருவிளை மணி பூ கருவிளை - குறி 68 எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் - மலை 224 எருவை நீடிய பெரு வரை சிறுகுடி - நற் 156/7 எருவை நறும் பூ நீடிய - நற் 261/9 எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் - நற் 294/4 எருவை சேவல் கிளை-வயின் பெயரும் - நற் 298/4 அருவி தந்த நாள்குரல் எருவை/கயம் நாடு யானை கவளம் மாந்தும் - குறு 170/2,3 கேழல் உழுது என கிளர்ந்த எருவை/விளைந்த செறுவில் தோன்றும் நாடன் - ஐங் 269/1,2 நெய்த்தோர் அன்ன செவிய எருவை/கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் - ஐங் 335/2,3 புன் புற எருவை பெடை புணர் சேவல் - பதி 36/9 குழூஉ சிறை எருவை குருதி ஆர - பதி 67/9 எருவை கோப்ப எழில் அணி திருவில் - பரி 18/48 எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை - பரி 19/77 மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை/வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் - அகம் 3/5,6 எருவை சேவல் கரிபு சிறை தீய - அகம் 51/6 செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் - அகம் 77/11 குருதி ஆரும் எருவை செம் செவி - அகம் 111/12 எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் - அகம் 161/6 அணிந்த போலும் செம் செவி எருவை/குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து - அகம் 193/6,7 கூர் நுதி செம் வாய் எருவை சேவல் - அகம் 215/12 ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை/ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் - அகம் 285/11,12 எருவை இரும் சிறை இரீஇய விரி இணர் - அகம் 291/10 எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும் - அகம் 297/17 அத்த எருவை சேவல் சேர்ந்த - அகம் 375/8 எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி - அகம் 381/10 விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப - புறம் 64/4 எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் - புறம் 224/8 செம் செவி எருவை திரிதரும் - புறம் 370/26 செம் செவி எருவை குழீஇ - புறம் 373/38 பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் - அகம் 97/7 தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல் - நாலடி:36 1/3 இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி எருவை குருதி பிணம் கவரும் தோற்றம் அதிர்வு இலா - கள40:20/1,2
கேழல் உழுது என கிளர்ந்த எருவை விளைந்த செறுவில் தோன்றும் நாடன் – ஐங் 269/1,2 கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல் நன்றாக விளைந்த நெல்வயலைப் போலத் தோன்றும் நாட்டினையுடையவன் எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் – மலை 224 கொறுக்கச்சியின் மெல்லிய கோலைப் பிடித்துக்கொண்டே கடந்துசெல்லுங்கள் ஊன் பதித்து அன்ன வெருவரு செஞ்செவி எருவை சேவல் கரிபு சிறை தீய – அகம் 51/5,6 மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக, காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் - மணி:6/117
வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன - 3.இலை:2 19/3 எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் - திருப்:1007/9 இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால - சீறா:4971/4 ஏகினன் அரக்கனும் எருவை வேந்தனும் - ஆரண்:13 52/1 ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை வேந்தனும் - ஆரண்:13 105/2 என்று உரைத்த எருவை அரசனை - ஆரண்-மிகை:4 6/1 கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் - கிட்:15 29/3 என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன் - கிட்:16 22/1 என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் - கிட்:16 30/3 பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட - யுத்2:16 244/3,4 ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ - யுத்2:18 116/4 உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் - யுத்2:19 59/2 வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை - யுத்3:22 129/3 ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவைவேந்தனும் மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை - ஆரண்:13 105/2,3 ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் - ஆரண்:13 32/2 மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் - ஆரண்:13 35/4 எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ - கிட்:7 116/4 எருவைக்கு முதல் ஆய சம்பாதி இலங்கையில் அ - சுந்:2 230/1 இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் - ஆரண்:13 121/1 மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ - சுந்:3 13/1 காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் - ஆரண்:12 19/2 வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் - ஆரண்:13 6/1 அ புறத்து எருவையின் அரசை கண்ணுறா - யுத்4-மிகை:41 230/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மிக்க நன்று. நன்றி