Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஏங்கி விரும்பு, 2. நலிவடை 

சொல் பொருள் விளக்கம்

ஏங்கி விரும்பு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

desire with a longing

suffer from weariness, languish;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157

திங்கள் ஏக்கமுற்று விரும்புகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்

கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல் – அகம் 39/21-24

பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *