சொல் பொருள்
(பெ) 1. குற்றம், பிழை, 2. துன்பம்,
சொல் பொருள் விளக்கம்
குற்றம், பிழை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fault, blemish, suffering, affliction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/12,13 உன்னோடு பேசிக்கொண்டிருப்பதில் பிழையேதும் இல்லை அன்றோ?” “பிழையொன்றும் இல்லை, நாளை வருகிறேன் விடு!” ஆதிமந்தி போல ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/20,21 ஆதிமந்தியைப் போல துன்பத்தைச் சொல்லிப் பெரிதும் மயங்குதல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்