சொல் பொருள்
ஏமம் – போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை.
சாமம் – நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை.
சொல் பொருள் விளக்கம்
ஏமாம்-பாதுகாப்பு; ‘ஏமப்புணை’ என்பது பாதுகாப்பாம் மிதப்பு. கடலில் செல்வார் கலம் கவிழநேரின் ஏமப்புணை கொண்டு உய்வர். ‘ஏமாஞ்சாராச் சிறியவர்’ என்று சொல்வார் வள்ளுவர். ஏமம் அரண்பொருள் தருதல் உண்டு (திருக்.815).
‘யாமம்’ என்பது சாமம் ஆயிற்று. ‘அஞ்சாமல் தனி வழியே போக வேண்டா’ என்பது ஒளவையார் மொழி. ஆனால் பாதுகாப்பில்லாத நண்பரொடு செல்லுதலினும் தனிமையில் போதல் சீரியது என்பது வள்ளுவம். (814)
‘ஏமம் சாமம் பாராமல் உதவிக்கு நிற்பான்’ என்பதொரு பாராட்டுரை.
ஏமம் சாமம் பார்க்காமல் வராதே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்