சொல் பொருள்
ஏய்ப்பு – ஏமாற்றுக்கு உட்படுதல்
சாய்ப்பு – சாய்ப்புக்கு அல்லது வீழ்த்துதலுக்கு உட்படுதல்.
சொல் பொருள் விளக்கம்
“அவன் ஏப்ப சாப்ப ஆள் இல்லை” என்பதும் “என்னை என்ன ஏப்ப சாப்பையா நினைத்து வருகிறாயா?” என்பதும் கேட்கக் கூடிய வழக்குகள்.
ஏய்ப்புக்கு சாய்ப்புக்கு ஆட்படுபவன் ‘ஏமாளி’ எனினும், அதன் மூலம் ஏமாறுதல் வீழ்தல் இரண்டையும் தழுவியதாம்.
ஏமாற்றுதல் போல, ஏமாறுதலும் இழிவு தானே! ஏமாறாப் பெருமித மொழி இது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்