Skip to content

ஏழை பாழை

சொல் பொருள்

ஏழை – வறுமையாளி
பாழை – வெறுமையாளி

சொல் பொருள் விளக்கம்

ஏழையின் விளக்கம் ‘ஏழை எம்போகி’ என்பதில் காண்க. பாழ் என்பது பழமையான சொல்; வெற்றிடமாம் வான்வெளியைப் பாழெனக் கூறும் பரிபாடல்.

‘பாழாய்ப் போன பாவி’ ‘பாழும் பழியும்’ என்பன வசையுரையும், இணைச் சொற்களுமாம். ஏழை பாழைக்கு உதவுதல் வேண்டும் என்பது அறவுரை. வறுமை என்பது இன்மைப் பொருள்தரினும் முழுவதும் இன்மை யன்றாம். ஆனால் வெறுமை – அறவே இன்மையாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *