சொல் பொருள்
ஒட்டு – குருதிக் கலப்பு நெருக்கம் உடையவர் ஒட்டு. அவரவர் உற்றார்.
உறவு – கொண்டும் கொடுத்தும் உறவு ஆயவர், உறவு.
சொல் பொருள் விளக்கம்
தாய் தந்தை உடன் பிறந்தார் மக்கள் என்பார் ஒட்டு ஆவர். கொண்டு கொடுத்த வகையால் நெருக்கமாவார் உறவு ஆவர். இனி ‘உற்றார் உறவு’ என்பதில் உற்றார் எனப்படுவார் ஒட்டு என்க. ‘கேளும் கிளையும்’ என்பதிலும் கேள் என்பது ஒட்டையும், கிளை என்பது உறவையும் குறிக்கும்.
ஒரு வேரில் இருந்து நீர் பெறும் மரம் செடிகள் ‘ஒட்டு’ எனப்பெறல் அறிக. ஒட்டார்-பகைவர் எனப்படுவார். ‘உற்றார் உறவு’ காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்