சொல் பொருள்
ஒற்றடம் வைத்தல் – அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
ஈமொய்த்தல் போல்வது இது. தடித்தனமோ பிடிவாதமோ செய்தால் ஒற்றடம் வைக்க வேண்டுமா? என்பர். அடிப்பாராம்! வீங்குமாம். அதற்கு ஒற்றடம் வைக்க நேருமாம். இவற்றை உள்ளடக்கிய குறிப்பு ஒற்றடம் வைத்தலாம். ஒற்றி ஒற்றி எடுப்பதால் ஒற்றடம், அடம்-ஈறு; கட்டடம் என்பதில் வருவதுபோல சாணி ஒற்றடம், சாம்பல் ஒற்றடம், துணி ஒற்றடம், மண் ஒற்றடம், வெந்நீர் ஒற்றடம், உப்பு ஒற்றடம் என அதன் வகை பல.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்