Skip to content

சொல் பொருள்

(வி.அ) 1. ஒருசேர,  2. ஒன்றுபோல,

சொல் பொருள் விளக்கம்

ஒருசேர, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

unitedly, in the same manner

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி 18/7

இளமை நலத்தையும், காம நுகர்ச்சியையும் ஒருசேரப் பெற்றவர்கள்

வேரும் முதலும் கோடும் ஓராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/1-3

வேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல்
தொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து
கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *