சொல் பொருள்
(பெ) எல்லை, வரம்பு,
கங்கு = நெருப்புப் பற்றி எரிந்த விறகுக் கட்டையின் துண்டு கங்கு
கங்கு என்பதற்கு எல்லை என்னும் பொருளும் உண்டு
சொல் பொருள் விளக்கம்
கங்கு = நெருப்புப் பற்றி எரிந்த விறகுக் கட்டையின் துண்டு கங்கு. பொற்கொல்லர், கொல்லர் ஆயோர் கங்கு கொண்டே பணி செய்வர். கரித் துண்டுகளில் தீப்பற்ற வைத்து ஊதி, அவர்கள் அதனைக் கொண்டு தம் பணி செய்வர். முன்னாளில் கங்கு கொண்டே தீப்பற்ற வைத்துச் சமைத்தல் வழக்கம், சிற்றூர்களில் இருந்தது. அதற்கெனத் தீக் கரண்டியும் இருந்தது. இது தென்னக வழக்கு. கங்களவு காண்க. கங்கு என்பதற்கு எல்லை என்னும் பொருளும் உண்டு. கங்கு கரையில்லாமல் என்பது வழக்குத் தொடர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
limit, border
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை எம்மோர் ஆக்கம் கங்கு உண்டே – புறம் 396/24,25 தலையளித்து மீள மீள உவக்குமாறு கொடுத்தான் எங்கள் தலைவன் எம்மனோராகிய இரவலர் அவன்பாற் பெற்ற செல்வத்துக்கு எல்லை உண்டோ?.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்