சொல் பொருள்
மாடு என்பது செல்வம் ஆதலால் அதனைக் கட்டிய இடம் அக்கசாலை எனப்பட்டு, கசாலை ஆயிற்று.
சொல் பொருள் விளக்கம்
மாடு கட்டும் தொழுவைக் கசாலை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். அது, அஃக சாலை (அக்கசாலை) என்பதன் முதற்குறையாகும். தவசம் கொட்டும் கொட்டிலும், காசு அடிக்கும் கொல்லுலையும் அமைந்த இடம் அஃக சாலை எனப்பட்டது. அக்கம் = தவசம், காசு வழங்கும். எ-டு: கசாலைத் தெரு (சேற்றூர்). மாடு என்பது செல்வம் ஆதலால் அதனைக் கட்டிய இடம் அக்கசாலை எனப்பட்டு, கசாலை ஆயிற்று. கொற்கையை அடுத்துள்ள அக்காசாலை, பழைய அஃக சாலையாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்