சொல் பொருள்
கஞ்சி காய்ச்சல் – கிண்டல் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய புல்லிய தவசங்களை இடித்து அரைத்து மாவாக்கி ஊறவைத்தும் புளிப்பாக்கி உலையிட்டுத் துடுப்பால் கிண்டிக் கிண்டிக் கஞ்சி காய்ச்சுதல் வழக்கம். கஞ்சியாவதற்குள் அதுபடும் பாடு பெரும்பாடு. அப்பாடுகள் எல்லாம் ஒருவனைப்படுத்துதல் கஞ்சி காய்ச்சலாக வழங்குகின்றதாம். கிண்டல், கேலி, நகையாண்டி படுத்துதலே இங்குக் கஞ்சி காய்ச்சல். கிண்டல் என்பது கீழ்மேலாகவும் மேல் கீழாகவும் புரட்டிப் புரட்டி எடுத்தல். உப்புமா கிண்டல்; கோழி கிண்டல் அறிக. கேளிக்கை, கேளியாய்க் கேலியாய் உள்ளது. நகையாண்டி ‘நையாண்டி’யாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்