Skip to content

சொல் பொருள்

(வி) 1. விரை, 2. மிகு

சொல் பொருள் விளக்கம்

விரை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

move fast, blow hard (as wind), increase

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் – அகம் 122/6

துயிலாத கண்களையுடையராய் ஊர்க்காவலர் விரைந்து சுழல்வர்

கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/8,9

காற்று மோதிவீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும்
இடி சினந்து அறைந்தாலும், தீங்குகள் பல நேர்ந்தாலும்

ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/3

ஞாயிறு
மிகுகின்ற அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *