சொல் பொருள்
(பெ) ஒரு சேர மன்னன்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சேர மன்னன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A Chera king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம் பொறையன் கடுங்கோ பாடி சென்ற குறையோர் கொள்கலம் போல – அகம் 142/4-6 நிறுத்துதற்கரிய சேனையினையுடைய போர் வெல்லும் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற வறியோரது பிச்சை ஏற்கும் கலம் போல இவன் பொறையன் எனப்படுவதால் இரும்பொறை மரபினன் ஆவான். பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாக இருத்தல்கூடும். இவனது முழுப்பெயர் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவன் சேரமான் கடுங்கோ வாழியாதன், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், கோ ஆதன் செல்லிரும்பொறை எனவும் அழைக்கப்படுகிறான். சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான். பார்க்க : மாந்தரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்