சொல் பொருள்
(பெ) 1. காடு, 2. புகலிடம், 3. தங்குமிடம்,
விளையாட்டில் எதிர்த்து ஆடுபவரைக் குறித்து, பின்னர் எதிர்ப்புப் பொருள் தருவதாயிற்று
சொல் பொருள் விளக்கம்
விலங்கு தங்கும் இடம் கட்சி எனப்படுதல் பழமையான இலக்கிய வழக்கு. குகை என்பதும் அது. கண் மறைவான இடம் கட்சி. பின்னாளில் கட்சி என்பது பகை என்னும் பொருளில் வழங்கலாயிற்று. விளையாட்டில் எதிர்த்து ஆடுபவரைக் குறித்து, பின்னர் எதிர்ப்புப் பொருள் தருவதாயிற்று. இக்காலத்தில் கட்சி; அரசியல், சாதிக் கூட்டுகளுக்குப் பெயராய்ப் பொது வழக்கிலுள்ளது. கட்சிகளைக் காட்ட வண்ணங்களே போதாத காலம் இது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
forest, refuge, dwelling place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உச்சி நின்ற உவவு மதி கண்டு கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த சில்வளை விறலியும் நானும் – புறம் 60/3-5 உச்சியில் நின்ற முழு மதியத்தைக் கண்டு காட்டு மயிலைப் போல சுரத்திடைப் பொருந்திய சில வளையலையுடைய விறலியும் நானும் வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 204,205 வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும், கரிய கழுத்தினையும் உடைய காடைப்பறவை புகலிடத்தில் சென்றடையும், கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் – மலை 235 தோகையையுடைய மயில்கள் தம்மிடங்களில் சோர்வுறும்வரை ஆடிக்கொண்டிருப்பினும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்