சொல் பொருள்
கட்டு – கோட்டை, அகழ், சுவர் முதலிய அரண் கட்டாகும்.
காவல் – காவலர், நாய் ஆகிய கண்காணிப்பு காவல் ஆகும்.
சொல் பொருள் விளக்கம்
கட்டுமானம் அமைந்தது ‘கட்டு’ எனப்பட்டது. பழங்காலக் கோட்டைகளைக் கவனித்தால் கட்டு காவல் அமைதி புலப்படும். அகழ், அரண், கோட்டை என்பவை இருப்பினும், அவற்றையும் தகர்த்தோ, கடந்தோ வந்து அழிவு செய்யும் பகைவர் இருப்பர். அவரைத் தடுத்து நிறுத்தவும் அழிக்கவும் காவலும் வேண்டியதாயிற்று. கோட்டை வாயிலில் காவலர் மேடையும் இருத்தலைக் கண்டு தெளிக. அதன் எச்சம் இக்கால ‘வளமனை’ “அலுவலகங்கள்” கருவூலங்கள் ஆகியவற்றில் இருத்தலை அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்