சொல் பொருள்
கட்டுப்படுதல் – கட்டளைக்கு உட்படுதல்
சொல் பொருள் விளக்கம்
பெற்றவர்கள் பெரியவர்கள் என்பதால் அவர்கல சொல்வது மனத்திற்கு ஒவ்வவில்லை எனினும் ஒருவாறு ஏற்றுக் கொண்டு நடப்பதுண்டு. அதற்குக் கட்டுப்படுதல் என்பது பெயர். நன்றியறிதல் காரணமாகவும் நன்றி செய்தாரை நினைந்து கட்டுப்பட்டு நடத்தலும் உண்டு. ஊர்க்கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலைமை அண்மைக் காலம் வரை இருந்தது. இதில் வரும் ‘கட்டு’ ஆணை என்னும் பொருள் தருவதாம். ‘ஊர்க்கட்டு’ மீறலாமா என்பது வழங்கு மொழி. தலைவன் சொற்படி நிற்கும் குடும்ப ஆட்சியைத் தலைக் கட்டு என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்