சொல் பொருள்
உடல்
சொல் பொருள் விளக்கம்
மரத்துண்டம், குட்டை என்பவற்றைக் குறிக்கும் கட்டை, பொதுவழக்குப் பொருளது. ஆனால் அது துறவர் வழக்கில் உடலைக் குறித்து வழங்கியது. “இந்தக் கட்டைக்கு இனி என்ன வேண்டும்? இந்தக் கட்டை சொல்கிறது” என்பர். இது பொதுமக்கள் வழக்கிலும் வழங்கலாயிற்று. ‘உடல்’ வேவதைக் ‘கட்டை’ வேகிறது என்பது அது.
உயிரற்ற உடலைக் கட்டை எனல் வழக்கம். உயிருள்ளவரும் துறவு நிலையில் தம்மைக் கட்டை என்பதும், வெறுப்பு நிலைக்கு ஆட்பட்டோர் தம் உடலைக் கட்டை என்பதும், வழக்காம். இந்தக் கட்டை இங்கே போகிறது. இந்தக் கட்டை இன்ன சொல்கிறது என்பது வேடத்துறவோர் உரை. வெறுப்புற்றோரும் ‘இந்ததக் கட்டைக்கு இது என்ன வேண்டிக்கிடக்கிறது. என்பதும் உண்டு. இவர் கூற்றிலும் கட்டை என்பது உடலையே குறித்தது, இனி, ‘கட்டை’யிலேபோவான் என்னும் வசை மொழியில் உள்ள கட்டை இடுகாட்டில் இக்கட்டையை எறிக்க உதவும் விறகுக் கட்டையைக் குறிப்பதாம். கட்டு அழிந்ததைக் கட்டை என்றனர் போலும். கட்டு நீர், வளம், இலை, தழை முதலியன.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்