1. சொல் பொருள்
(பெ) 1. தலைமாலை – பெரும்பாலும் ஆடவர் அணிவது, 2. பூமாலை,
கண்களைப்போல் இலை அமைந்தவை கண்ணி எனப்படும்
வெற்றிலைக் கொடிக்காலில் இரட்டை இரட்டையாக அமைந்த கொடி வரிசை கண்ணி
பார்க்க குன்றி
2. சொல் பொருள் விளக்கம்
இருவிரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை
கண்களைப்போல் இலை அமைந்தவை கண்ணி எனப்படும். எ-டு: கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி. கண்கள் போல் இணையாகத் தொடுக்கப்படும் மாலை கண்ணி எனப்படும். “கண்ணி கார்நறுங் கொன்றை” அகம். வெற்றிலைக் கொடிக்காலில் இரட்டை இரட்டையாக அமைந்த கொடி வரிசை கண்ணி என்று வழங்கப்படுதல் வெற்றிலைக் கொடிக்கால் வழக்கமாகும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
wreath worn on the head; chaplet
garland
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் – பட் 109 கணவர் (சூடும்)கண்ணியை மகளிர் (தலையில்)சூடிக்கொள்ளவும், குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 199,200 ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும், பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்