சொல் பொருள்
‘கண்ணும் மண்ணும் என்பது முத்தெடுப்பார் அல்லது முத்துக் குளிப்பார் வழக்கில் ஊன்றியுள்ள தொடராகும்.
சிறுவர் விளையாட்டில் மகிழ்வுப் பெருக்கோ, தோல்விக் கிறுக்கோ வந்துவிட்டால் மண்ணையள்ளி மாறி மாறி வீசுதல் உண்டு. அப்பொழுதில் மண் தலையில் படும்; உடலில் படும்; கண்ணிலும் படும்.
சொல் பொருள் விளக்கம்
‘கண்ணும் மண்ணும் என்பது முத்தெடுப்பார் அல்லது முத்துக் குளிப்பார் வழக்கில் ஊன்றியுள்ள தொடராகும். அவர்கள் ஆழத்துள் சென்று முத்துச் சிப்பிகளை அள்ளுங்காள், கண் தெளிவாகத் தெரியாமல் போதலுண்டு. அவர்கள் மேலே வருவதெற்கென விடப்படும் கயிற்றைப் பற்றிக் கொள்ளவும் இடருண்டு. அந்நிலையில் நீர் மூழ்குவார் ‘கண்ணுமண்ணும் தெரியவில்லை’ என்பர் மண் என்பது ‘மணடக்கு’எனப்படும் கயிறு; அக்கயிற்றை மேலிருந்து கீழே விடுபவன் ‘மண்டக்காள்’ எனப்படுவான். மண்ணுதல் குளித்தல், குளிப்பாட்டுதல் பொருளவாதல் மண்ணுமங்கலம் என்பதால் அறிக.
சிறுவர் விளையாட்டில் மகிழ்வுப் பெருக்கோ, தோல்விக் கிறுக்கோ வந்துவிட்டால் மண்ணையள்ளி மாறி மாறி வீசுதல் உண்டு. அப்பொழுதில் மண் தலையில் படும்; உடலில் படும்; கண்ணிலும் படும். புழுதியாடிய யானை போலச் சிறார் விளங்குவர். சிறுமியர்க்கும் இவ்வாடலில் விலக்கு இல்லை. கலித்தொகைத் தலைவி ஒருத்தி நகையாண்டி செய்த ‘முதிய எருமை’ போல்வான் ஒருவன் கண்ணில் மண்ணை எறிந்து கதறச் செய்த காட்சி யுண்டு. அவ்வளவு பழமையுடையது ‘கண்ணும் மண்ணும்’ ஆட்டம். கண்ணுக்கு ஒரு துகளும் பேரிடையூறாம். மண்ணுக்கு என்ன வந்தது? இரண்டையும் ஒன்றாக எண்ணிச் சிறுதனம் செய்வாரைக் ‘கண்ணும் மண்ணும்’ தெரியாமல் இப்படியா ஆடுவது? என்று சினத்தால் தட்டிக் கேட்பதும் தட்டுவதும் உண்டு. இன்னொரு வகையாலும் ‘கண் மண்’ வழக்குண்டு;
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்