சொல் பொருள்
ஈனாக் கிடாரியைக் கன்னக் கிடாரி என்பது அரூர் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
கிடாரி என்பது மாட்டில் பெண்; பசு, எருமை ஆகியவற்றின் பெண்பால் கிடாரி எனப்படும். ஆண்பால் ‘கடா’ எனப்படும். உறங்கியவன் கன்று கடாக் கன்று என்பது பழமொழி. பசு எருமை வளர்த்துப் பால் விற்பவர் கன்று போட்டுப் பெருகுதலைக் கருதுவார். ஆனால் உரிய பருவம் வந்தும் ஈனாக் கிடாரியைக் கன்னக் கிடாரி என்பது அரூர் வட்டார வழக்காக உள்ளது. கன்னிக் கிடாரி ஈனும். ஆனால் கன்னக் கிடாரி ஈனாதது. ஈனா வாழை என்பது போன்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்