Skip to content
கமம் - completeness

கமம் என்பதன் பொருள்நிறைவு, முழுமை,வேளாண்மை, விவசாயம், உழவு, வயல்.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) நிறைவு, முழுமை

வேளாண்மை, விவசாயம், உழவு, வயல்  

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

fullness, completeness, entirety

agriculture, cultivation, field, farm

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திருமுருகாற்றுப்படை 7

கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள்,

விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி – நற் 12/1

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்

கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1

கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்

கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/10

காட்டிலுள்ள மயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை

கமம் நிறைந்து இயலும் - தொல்காப்பியம் 2-8-58

கமம் சூழ் கோடை விடர்_அகம் முகந்து - மது 308

நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை - நற் 89/3

மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை - நற் 99/6

வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம் - நற் 261/3

முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை - நற் 347/1

காலொடு வந்த கமம் சூல் மா மழை - குறு 158/3

சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் - குறு 314/1

வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல் - பதி 11/2

கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை - பதி 24/28

விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல் - பதி 45/20

வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல் - பதி 81/2

கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் - பரி 18/2

கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை - அகம் 43/1

கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என - அகம் 134/2

கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்குருகு - அகம் 141/19

அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த - அகம் 253/15

கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு - அகம் 383/10

கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி - கார்40:33/1

கரும் கடல் மேய்ந்த கமம் சூழ் எழிலி - கார்40:37/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *