சொல் பொருள்
கறத்தல் – பறித்தல்
சொல் பொருள் விளக்கம்
மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். ஒரு முறை வருத்திப் பறிப்பது வழிப்பறி. மொத்தமாகப் பறிப்பது கொள்ளை; தெரியாமல் கவர்வது திருட்டு. இது நயமாகப் பல் கால் சிறுகச் சிறுகப் பறித்துக் கொண்டேயிருப்பது கறத்தலாகும். “என்னை அவன் கறவை மாடாகவைத்துக் கொண்டிருக்கிறான். கறவை நின்று போனால் ஏறிட்டுப் பார்க்க மாட்டான்” என்பதில் கறவைப் பொருள் தெளிவாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்