சொல் பொருள்
சாராயம் என்பது மதி மருள – இருள – ச்செய்வதால் அதனைக் கறுப்பு என்பது வில்லுக்கிரி வட்டார வழக்காக உள்ளது
கறுப்பு (கருப்பு) – பேய்
சொல் பொருள் விளக்கம்
கறுப்பு என்பது வெறுப்பு. கடுஞ்சினம் என்னும் பொருளில் வரும் சொல். கறுப்பு சிவப்பும் வெகுளிப் பொருள என்பது தொல்காப்பியம். சாராயம் என்பது மதி மருள – இருள – ச்செய்வதால் அதனைக் கறுப்பு என்பது வில்லுக்கிரி வட்டார வழக்காக உள்ளது. கள் என்பது கருநிறப் பொருளில் வந்ததையும் அறிக.
கறுப்பு, கருநிறத்தைக் குறியாமல் கரு நிறத்தால் அச்சுறுத்தும் பொய்த்தோற்றத்தைக் குறித்து வருவது. சிலர் இரவில் தனித்துச் சென்றால் நிழலசைவு, இருள், சலசலப்பு இவற்றால் அஞ்சி நடுங்குவர், இத்தகையரைக் கருப்பு அச்சுறுத்திவிட்டது எனக் கூறிக் கருப்போட்டும் முயற்சியில் ஈடுபடுவது நாட்டுப்புறக் காட்சி. அதிலும் பெண்களுக்கே இக்கருப்புக் கோளாறு காட்டுதலும் பேயாடவைத்தலும் உடுக்கடித்தலும் கல் சுமக்க வைத்தலுமாகிய நிகழ்ச்சி இந்நாளிலும் தொடர்கிறது. “ஓராளும் கறுப்புடையும் பேய்” என்றார் பாவேந்தர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்