Skip to content

சொல் பொருள்

1 (வி) 1. கடந்துபோ, முடிந்துபோ, 2. உருவு, 3. நீங்கு, விலகு, 4. விலக்கு, இல்லாமல் செய், 5. கட, 6. கடன் போன்றவற்றைத் தீர், ஒழி, 7. நிகழ்ந்து முடி,

2. (பெ) 1. கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு, 2. கம்பு, சிறியகுச்சி, 3. கரும்பின் அடி

3. (பெ.அ) மிகுந்த,

சொல் பொருள் விளக்கம்

கடந்துபோ, முடிந்துபோ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pass,as time, elapse, unsheath, be removed, pass through, remove, proceed further, backwater, stick, staff, excessive, extreme

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சாறு கழி வழி நாள் சோறு நசை_உறாது – பொரு 2

விழா முடிந்துபோன அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது

உறை கழி வாளின் மின்னி – நற் 387/9

உறையிலிருந்து உருவிய வாளைப்போல மின்னி

கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/5

கடிய காற்றினால் பறிக்கப்பெற்ற காம்பினை விட்டு நீங்கிய தேக்கின் இலைகள்

புலிப்பால் பட்ட வாமான் குழவிக்குச்
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும் – புறம் 323/1,2

புலியிடம் அகப்பட்ட தாவும் மானின் கன்றுக்கு
சினம் இல்லாத முதிய கறவைப்பசு தன் கன்று எனச் சேர்த்து தன் பாலை ஊட்டிவிடும்

திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74

திசைகள் முழுதும் கமழும்படியாக மேகத்தின் அடிவயிற்றைக் கடந்துபோகும் திங்களின்

கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/2,3

ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
நவ்வி மானின் குட்டி கவ்வி அன்றைய காலையுணவை முடி- க்கும்

நும் மனை சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/1,2

உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும்,
எமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழா நடந்து முடியட்டும் என்று

இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117

பெரிய உப்பங்கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,

செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 149

இலை தழைக் குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட சிறிய குச்சியினையுடைய கதவினையும்,

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53

கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *