1. சொல் பொருள்
(பெ) காகம், காக்கா
2. சொல் பொருள் விளக்கம்
கா கா என்று கத்துவதால் காக்கை, காகம் எனவும், காக்கா எனவும் அழைக்கப்படுகின்றது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Common House Crow(in India)
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கரும் காக்கை கவவு முனையின் – பொரு 184
சேய் இறா எறிந்த சிறுவெண்காக்கை – நற் 31/2
சிறுவெண்காக்கை பல உடன் ஆடும் – நற் 231/4
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை/தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/8,9
கடல் அம் காக்கை செ வாய் சேவல் – நற் 272/1
மாசு இல் மரத்த பலி உண் காக்கை/வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி – நற் 281/1,2
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை/புன்கண் அந்தி கிளை-வயின் செறிய – நற் 343/5,6
சிறுவெண்காக்கை ஆவித்து அன்ன – நற் 345/4
சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/9
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை – நற் 367/1
பெரும் கடல் கரையது சிறுவெண்காக்கை – குறு 246/1
பெரும் கடல் கரையது சிறுவெண்காக்கை – குறு 313/1
சிறுவெண்காக்கை செ வாய் பெரும் தோடு – குறு 334/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 161/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 162/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 163/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 164/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 165/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 166/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 167/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 168/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 169/1
பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை – ஐங் 170/1
மறு இல் தூவி சிறுகரும்காக்கை – ஐங் 391/1
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா – பரி 20/87
கடல்சிறுகாக்கை காமர் பெடையொடு – அகம் 170/10
இல்-வழி படூஉம் காக்கை/கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/16,17
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை – அகம் 319/1
மை நிற உருவின் மணி கண் காக்கை/பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/15,16
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும் – புறம் 342/1
வாய் வன் காக்கை கூகையொடு கூடி – புறம் 362/17
விருந்து வர கரைந்த காக்கையது பலியே – குறு 210/6
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி – புறம் 238/3
கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ – ஐங் 314/2
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர – பதி 30/39
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது