சொல் பொருள்
(மு.ஏ.வி.மு) காண்பாயாக,
சொல் பொருள் விளக்கம்
காண்பாயாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
see
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36 பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்! கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40 கொம்புகள் மேலே எழும்போது ஆடுகின்ற கொத்தான மணிகளைப் பார் – காணிகா என்புழி இக என்னும் முன்னிலை அசை இகா என நீண்டது. திரிந்தது என்பாரும் உளர் – நச் உரை, பெ.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்