சொல் பொருள்
காதில் பூச்சுற்றல் – அறிவறியாமை
சொல் பொருள் விளக்கம்
மிகப்பழ நாள் வழக்கு காதில் பூச்சுற்றல். தலையில் பூச் சூடல் இன்னும் காணக்கூடிய பெருவழக்கு. கழுத்துச் சங்கிலியிலோ கயிற்றிலோ பெண்கள் ‘பூச்சரம்’ சுற்றிக் கொள்ளல் நாட்டுப்புறங்களில் உண்டு. காதில் ஒற்றைப் பூவைச் சிலர் வைத்துக் கொள்ளலும் அரிதாகக் காணலாம். முற்காலத்தில் ஆண்களும் குடுமி வளர்த்தனர்; கொண்டை போட்டனர்; பூவும்
சூடினர். தலையில் பூச்சூடியதுடன் காதிலும் பூச்சரத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டனர். அது ‘பழங்காலம்’ ‘படிப்பறிவில்லாத காலம்’ நிகழ்ந்தவை என்னும் கருத்தால் தற்காலக் கல்வி கற்றவர், ‘என்னை என்ன காதில் பூச்சுற்றினவன் என்றா நினைத்துக் கொண்டாய்?’ என்பது வழக்கமாயிற்று. கொண்டை முடித்தவன், சிண்டு முடித்தவன் என்பதும் இது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்