சொல் பொருள்
இல்லை என்னும் பொருளில் வழங்குகிறது
காலி – ஊர்சுற்றி, போக்கடிப்பு
சொல் பொருள் விளக்கம்
காலால் நடந்து செல்லும் பசு முதலியவற்றைக் காலி என்பது பொதுவழக்கு. கன்றுடன் கூடிய பசு, கன்று காலி எனப்படும். காலி என்பது இல்லை என்னும் பொருளில் வழங்குதலும் பெறும். வீடு காலி; கடை காலி; தட்டம் காலி என்பர். இல்லை என்னும் பொருளில் வழங்குகிறது. ஆனால், அவற்றில் உள்ளவை இல்லை என்பது இல்லை. காற்று(கால்) உள்ளது வேறொன்றும் இல்லை என்பது பொருளாம். இது அறிவியல் திறம் வாய்ந்த சொல்லாம்.
பொழுதை வீணடித்து ஊர்சுற்றித் திரிபவன் காலி. அவனினும் மிகக் காலி, ‘படு காலி எனப்படுவான். கால்நடை ‘காலி’ எனப்படும், ஊர் ஆடு மாடுகள், ஊர்க்காலி என வழக்குறும். மாந்தரெல்லாம் காலால் நடப்பவரே எனினும் வெட்டித்தனமாகச் சுற்றுபவரே காலியாகச் சொல்லப்படுவராம். காலித்தனம், காலிப்பயல் என்பவை பொழுதை வீணாக்குவதுடன் பொருளையும் வீணாக்குபவனைக் குறிப்பதாகலாம். காலியாதல் போக்கடிப்பாக உள்ளதும் அறியத்தக்கதே. மேல் வீடு (மூளை) காலி; வாடகைக்கு விடப்படும்” என்பது எள்ளற் பழமொழி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்