சொல் பொருள்
காலைப் பிடித்தல் – பணிந்து வேண்டுதல்
சொல் பொருள் விளக்கம்
இறைவன் திருவடியை வணங்கல் பழஞ்செய்தி. அவ்வாறே தோற்றுப் போன வீரர்கள் தங்கள் கருவிகளை வெற்றி பெற்றவர் காலடியில் வைத்து அடைக்கலம் அடைதலும் மரபு. இவற்றைப்போல் குற்றம் செய்தவர்கள் தம் குற்றத்தைப் பொறுக்க வேண்டு மென்று ஊர் மன்றத்தில் விழுந்து வணங்கலும் வழக்கு. இவற்றிலிருந்து காலைப் பிடிக்கும் வழக்கம் உண்டாயிற்று. பணிவோடு ஒன்றை வேண்டுவோர் வேண்டுதற்கு உதவுவார், காலைப் பிடித்தலும் வணங்கலும் நடைமுறையாயிற்று. காரியம் ஆகக் காலைப்பிடித்தல் எனப் பழமொழியும் உண்டாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்