சொல் பொருள்
கிட்ட – குறித்த அளவுக்கு நெருங்க.
தட்ட – குறித்த அளவுக்கு மேலேற.
சொல் பொருள் விளக்கம்
கிட்ட-நெருங்க; தட்ட-தட்டுமாறு உயர. ஏறக்குறைய, ஏறத்தாழ, கூடக் குறைய என்பன போல வரும் இணைச் சொல்லே கிட்டத் தட்ட என்பதாம். கிட்டத்தில் என்பது பக்கத்தில் என்னும் பொருள்தருவதும் உண்டு. அதற்கு முரண் எட்டத்தில் என்பது. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை என்பவை முரண்பார்வைகளே. குழிவு குவிவு காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்