Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும், 

சொல் பொருள் விளக்கம்

ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும், பாணர்குடியில் பெண்களும் இதனை வாசிப்பர். அவர் கிணைமகள் எனப்படுவார்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a drum

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாணர்குடியில் பெண்களும் இதனை வாசிப்பர். அவர் கிணைமகள் எனப்படுவார்.

வளை கை கிணை மகள் – சிறு 136

போர் மறவர்கள் இதனை இசைத்து மகிழ்வர்.

வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44

முருகனை வணங்குவோர் இதனை இசைத்து வணங்குவர்.

கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று – பரி 8/81,82

உறுதியான தோல் வாரினால் இது இறுகக் கட்டப்பட்டிருக்கும். கோலினால் முழக்கப்படும்.
வள் வார்

விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/2,3

பாணர் ஊர்விட்டு ஊர் போகும்போது நடை வருத்தம் தீர மரத்தடியில் இதனை இசைத்து மகிழ்வர்

சுரம் முதல் வருத்தம் மரம் முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்க – அகம் 301/9,10

மன்னர் படையெடுத்துச் செல்லும்போது இதனை இசைத்துச் செல்வது வழக்கம்.

தந்தை தம்மூர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/11,12

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *