சொல் பொருள்
கிறுத்தான் – குறும்புக்காரன்.
மறுத்தான் – குறும்புக்காரன் குறும்பையும் மடக்கும் குறும்புக் காரன்.
சொல் பொருள் விளக்கம்
“எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் கிறுத்தானுக்கு மறுத்தானாக இருப்பதே உனக்கு வழக்கம்” என்பது ஓர் இடிப்புரை.
கிறி என்பதற்குப் பொய், வஞ்சம் முதலிய பொருள் உண்டு. கிறுத்துவம் என்பது குறும்பு என்னும் பொருளிலும் வழங்குகின்றது. பொய்யைப் பொய்யால் வெற்றி கொள்வான் போல் குறும்பைக் குறும்பால் வெற்றி கொள்வான். கிறுத்தானுக்கு மறுத்தானாம். ‘வலியவனுக்கு வலியவன் வையகத்தில் உண்டு’ என்பது பழமொழியே யன்றோ!
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்