சொல் பொருள்
(பெ) 1. பறவைகளின் கூடு, 2. சிறிய குடில்,
சொல் பொருள் விளக்கம்
பறவைகளின் கூடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
birds’ nest, small shed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/6,7 மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும் கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7 கன்றின் தோலினால் ஆன குடிலையுடைய, சினம் பொருந்திய நாயையுடைய வடுகர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்