சொல் பொருள்
(பெ) 1. குடநாட்டைச் சேர்ந்தவர், 2. இடையர், ஆயர்,
சொல் பொருள் விளக்கம்
குடநாட்டைச் சேர்ந்தவர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
people of the land called kudanadu
cowherds, shepherds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடவர் வாட குடவர் கூம்ப – பட் 276 வடநாட்டவர் களையிழக்க, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக, இது திருமாவளவன் என்ற கரிகால் வளவனை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது எனவே சோழரின் கீழ் இந்தக் குடநாடு இருந்துள்ளது தெளிவாகிறது. குடவர் கோவே கொடி தேர் அண்ணல் – பதி 55/9 குடநாட்டவர்க்குத் தலைவனே, கொடிகட்டிய தேருடைய அண்ணலே இது ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது. இவன் குட்டுவர் வழியைச் சேர்ந்தவன். எனவே குட்டுவரின் கீழ் இந்தக் குடநாடு இருந்துள்ளது தெளிவாகிறது. வரையா ஈகை குடவர் கோவே – புறம் 17/40 வரையாது கொடுக்கும் வண்மையையுடைய குடநாட்டார் வேந்தே இது சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்க் கிழார் பாடியது. எனவே பொறையரின் கீழ் இந்தக் குடநாடு இருந்துள்ளது தெளிவாகிறது. குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16 இடையர் ஆக்கிய விளங்குகின்ற அவிழாகிய சோற்றை – குடவர் – ஆயர் – நாட்டார் உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்