சொல் பொருள்
குட்டி – பெண் பிள்ளை.
குறுமான் – ஆண் பிள்ளை.
சொல் பொருள் விளக்கம்
“உங்களுக்குக் குட்டி குறுமான் எத்தனை” “குட்டி குறுமான் எல்லாம் நலமா?” என வினவுதல் வழக்கு. குட்டி என்பது பெண் பிள்ளையைக் குறித்தல் இன்றும் மலையாள நாட்டில் பெரு வழக்கமாம். அதன் ஆண்பால் ‘குட்டன்’ என்பது. அது, நாலாயிரப் பனுவலில் பெருக வழங்குகின்றது. பெருமகன் ‘பெருமான்’ ஆவது போலக் குறுமகன் ‘குறுமான்’ ஆனான் என்க. குட்டியின் சிறுமைப் பொருளைக் குட்டிச் சாக்கு, குட்டிப்பை, குட்டியப்பா இவற்றில் காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்