சொல் பொருள்
குதிரையில் வருதல் – குடிமயக்கில் தள்ளாடிவருதல்.
சொல் பொருள் விளக்கம்
‘கள்’ வெண்ணிறமானது. அதனால் வெள்ளை எனப்படும். அது தண்ணீர் போல்வது. அதனால் வெள்ளைத் தண்ணீர் என்றும் தண்ணீர் என்றும் வழங்கப்படும்; குடித்தவன் தள்ளாடித் தள்ளாடி நடப்பான். அந்நிலையில் உயர்ந்தும் தாழ்ந்தும் அவன் வரும் தோற்றம் குதிரைமேல் வருபவன் தோற்றத்தை விளக்கும். ஆதலால் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வருபவனை வெள்ளைக் குதிரையில் வருகிறான் என்றோ குதிரையில் வருகிறான் என்றோ கூறுவது வழக்காயிற்று. குதிரையில் வருதல், தள்ளாடிக் குலுங்கி வருதல் என்னும் பொருளுக்கு உரியதாகியது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்