சொல் பொருள்
குதிர்தல் – ஆளாகியிருத்தல்.
பூப்படைதல் என்பதைக் குதிர்தல் என்பது பார்ப்பனர் வழக்கு
குதிர் என்பது நெற்கூடு. அது அசைவின்றி அமைந்திருப்பது போல ஓரிடத்திருக்கச் செய்தலைக் குதிர்தல் என்கின்றனர்.
சொல் பொருள் விளக்கம்
பூப்படைதல் என்பதைக் குதிர்தல் என்பது பார்ப்பனர் வழக்கு. குதிர் என்பது நெற்கூடு. அது அசைவின்றி அமைந்திருப்பது போல ஓரிடத்திருக்கச் செய்தலைக் குதிர்தல் என்கின்றனர்.
குதிர் ஓரிடத்திலேயே இருக்கும். அதனை வேறிடத்திற்கு அகற்றி வைப்பதோ மாற்றி வைப்பதோ இல்லை. அதுபோல் வீட்டின் ஒரு பகுதியில் அதற்கென அமைக்கப்பட்ட ஓரிடத்தில் பூப்பு அடைந்த பெண்ணை வைத்திருப்பது அண்மைக்காலம் வரை நிகழ்ந்த வழக்கம். அதனால் அவ்வோரிடத்திலேயே நீராட்டு நிறைவுவரை வைக்கப்பட்டிருத்தல் ‘குதிர்தல்’ எனப்பட்டது. குதிர்ந்திருக்கிறாள் எனின் ஆளாகியிருக்கிறாள் என்பது பொருளாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்