சொல் பொருள்
குந்தாணி வேர்விடல் – நடவாதது நடத்தல்
சொல் பொருள் விளக்கம்
குந்தாணி என்பது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல் வைத்தும் இடிக்கப் பயன்படுத்துவர். குந்தாணி, சிந்தாமல் சிதறாமல் இடிக்கப்பயன்படும்.இரும்பால் ஆகிய அது, கல்லின்மேல் இருந்து இடிபட அமைந்த அது வேர் விட்டுத் துளிர்த்தலுண்டா? ஈயாக்கருமி ஒருவன் ஏதோ ஒன்றைத் தன்னை மறந்து கொடுப்பானெனின் அவன் கொடை குந்தாணி வேர் விட்டது போல என்பர். நடவாதது நடத்தல் குறியாம் அது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்