சொல் பொருள்
சட்டைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மூடுசட்டை குப்பாயம் (கோட்டு) ஆகும்
குப்பாயம் என்பது மகளிர் அணியும் சட்டைப் பெயராக ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் உள்ளது.
சொல் பொருள் விளக்கம்
சட்டைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மூடுசட்டை குப்பாயம் (கோட்டு) ஆகும். இதனைத் தென்னக வழக்கில் கேட்கலாம். குப்பி என்பது கொம்புப் பூண் கூந்தல் இறுக்கி. இவற்றைப் போல் உடலை இறுக்கிப் பிடித்து மூடுவது குப்பாயம் ஆகும். முன்னாளில் நாடக உடையாகப் பயன் படுத்தினர் நம்மவர். குப்பாயம் என்பது மகளிர் அணியும் சட்டைப் பெயராக ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்