சொல் பொருள்
(பெ) 1. குவியல், 2. தானியக் குவியல், 3. கழிவுப்பொருள்கள்,
சொல் பொருள் விளக்கம்
குவியல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heap, heap of grains, garbage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/14 நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் அளவிலடங்காத குவியல் குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 244 மலை என்னும்படி குவித்த குறையாத நெற்குவியல் குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137 குப்பையில் விளைந்த கீரையை உப்பு இல்லாமல் வேகவைத்து ஈத்து இலை குப்பை ஏறி – புறம் 116/7 ஈச்ச மரத்தின் இலைகளையுடைய குப்பையின் மேல் ஏறி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்