சொல் பொருள்
கெட்டிபடுதலும் அடிப்பிடித்தலும் சுவை மாறலும் கும்புதலாம்.
கும்புதல் – அடிப்பிடித்தல்
சொல் பொருள் விளக்கம்
கும்பி என்பது வயிறு. அது பொது வழக்குச் சொல் கும்பி கொதிக்கிறது என்பர். இனிக் “கும்பி மணக்கிறது கருப்புக்கட்டி” என்றும், அடுப்பில் இருந்து கும்புதல் வாடையடிக்கிறது என்றும் கூறுதல் உண்டு. கெட்டிபடுதலும் அடிப்பிடித்தலும் சுவை மாறலும் கும்புதலாம்.
சோறு கறி வேகுங்கால் நீர் இன்மையாலும் கிண்டி விடாமையாலும் அடிப்பிடித்து விடுவது உண்டு. அடிப்பிடித்தலைக் கும்புதல் என்பர். அதனால் ஏற்படும் நெடியைக் கும்பி மணக்கிறது எனக் கூறுவர். “கும்பிப்போய் விட்டது; கும்பிக்கு ஆகாது” என்பர். பின்வரும் கும்பியாவது வயிறு உடலுக்கு ஒவ்வாது என்பதாம். குப்பல், குப்புதல், குப்பை, குப்பென்று முளைத்தல், குப்பென்று வியர்த்தல் என்பனவெல்லாம் செறிவுப் பொருளன. ஓரிடத்துத் திரண்டு பற்றிக் கொண்டது கும்புதலாம். ‘கும்மிய கருப்புக் கட்டி இனிப்பும் கெட்டு, சுவையும் கெட்டுச் சேர்ந்ததையும் கெடுத்துவிடும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்