Skip to content

குறியமுண்டு

சொல் பொருள்

‘குறியமுண்டு‘ (கோவணம்) என்பது அகத் தீசுவர வட்டார வழக்காகும்

சின்னஞ்சிறுதுணி என்னும் பொருளில் வரும்

சொல் பொருள் விளக்கம்

முண்டு என்பது துண்டு. முண்டும் முடிச்சுமாகக் கட்டை இருக்கிறது உடைப்பது அரிது என்பது வழக்கம். முண்டு என்பது சிறிய துணியைக் குறிப்பது சேரல வழக்கு. குறி என்பது மறைப்பிடம். அதனை மறைக்கக் கட்டும் துணியைக் ‘குறியமுண்டு‘ (கோவணம்) என்பது அகத் தீசுவர வட்டார வழக்காகும். குறிய என்பதும் சிறிய என்னும் பொருள் தருவதாயின் ஒருபொருள் பன்மொழியாம். சின்னஞ்சிறுதுணி என்னும் பொருளில் வரும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *