சொல் பொருள்
(பெ) 1. வலிமை, 2. அரண், 3. பகைவர்
சொல் பொருள் விளக்கம்
வலிமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strength, stronghold, fort, enemy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504 பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும், பிற புலம் புக்கு அவர் அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு உய்த்தன்று-மன்னே நெஞ்சே – நற் 77/2-4 வேற்று மன்னர் நாட்டில் புகுந்து அவரின் கடத்தற்கரிய காட்டரணை அழித்து நிம்மதிப்பெருமூச்சு விட்டாற்போன்று துன்பம் தீர்ந்தது என் நெஞ்சு குறும்பு அடைந்த அரண் கடந்து – புறம் 97/4 பகைவர் சேர்ந்த அரண்களைக் கடந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்