சொல் பொருள்
குலுங்காமல் – நாணமில்லாமல்
சொல் பொருள் விளக்கம்
மானங் கெடுமாறு ஒரு சொல்லைச் சொன்னால் உடனே தலை தாழும்; மனம் நடுங்கும்; கால்கைகள் உதறும்; இது தாங்கிக் கொள்ள முடியாமல், இப்படியாகி விட்டதே என்னும் மானவுணர்வால் ஏற்படும் நிலை. இன்னும் சிலர்க்கு இத்தகு மானக்கேடாம் நிலை உண்டாகும்போது தாங்கிக் கொள்ள மாட்டாத சீற்றம் உண்டாம். என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தானும் அறியாமல் ஏதேதோ செய்துவிடுவர். இவ்விரு நிலைகளிலும் உடல் குலுங்கும். மானங்கெடுக்கும் போதும் குலுங்காமல் ஒருவர் இருந்தால் ‘வெட்கங் கெட்டவன்’ எனப்பழிப்பர். “எவ்வளவு பேசினேன்; குலுங்காமல் இருக்கிறான். மானம் வெட்கம் இருந்தால் அப்படி இருப்பானா?” என்பர். ஆதலால் குலுங்குதலுக்கு நாணுதல் பொருள் உண்மை விளங்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்