Skip to content

கூடமாடப் (போதல்)

சொல் பொருள்

கூட – ஆள் துணையாகப் போதல்.
மாட – பேச்சுத் துணையாகப் போதல்.

சொல் பொருள் விளக்கம்

துணைகளில் வழித்துணையாக வருவாருள் வலுத்துணையும் உண்டு; வாய்த் துணையும் உண்டு. முன்னது
வழித்துணை; பின்னது வாய்த்துணை.

கூடமாட வேலை செய்தல் என்பதில் கூட என்பது கூடியிருந்து வேலை செய்தலையும், மாட என்பது பேச்சுத் துணையாக இருந்து வேலை செய்தலையும் குறிக்கும். மாற்றம்-சொல்; மாட்டாடுதல் ‘பேசுதல்’ என்னும் பொருள் தரும் தெலுங்குச் சொல்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *