சொல் பொருள்
கூட்டுதல் – திருமண முடித்தல்
சொல் பொருள் விளக்கம்
“உனக்குக் கூட்டி வைத்தால்தான் வீட்டில் தங்குவாய்” என்பது ஊர் சுற்றிக்கு வீட்டார் சொல்லும் வாய்ச்சொல். இங்கே கூட்டி வைத்தல் அல்லது கூட்டுதல் என்பது திருமணம் முடித்தலைக் குறிக்கும். முதலாவது மணமகள் மேடைக்கு வருவான். அதன் பின்,பெண்ணை மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் அமர்த்தித் திருமணம் நிகழ்த்துவது நடைமுறை. அதனால் ஆண்மகனோடு, பெண்மகளைக் கூட இருக்கச் செய்யும் நிகழ்ச்சி கூட்டுதல் எனப்பட்டதாம். இக்கூட்டுதல் முறைவழி ; நிறை வழி. ஆனால் கூட்டிக் கொடுத்தல் என்பது முறைகேட்டு வழி ; இழி வழி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்